Monday, December 7, 2009

ஈழப்போரும் தமிழ் வார இதழ்கள் வணிகமும்!!!

ஈழத்தில் சென்ற ஆண்டு இறுதியில் போர் தீவிரமடைந்ததில் இருந்து இன்று வரை தமிழ் வார இதழ்களின் விற்பனை முன்பை விட அதிகம் என்கிறது ஒரு புள்ளி விபரம். ஒவ்வொரு வாரமும் பிரபாகரனை அட்டை படத்தில் போட்டு அதன் மேலே வீரமிக்க வாசகங்கள் இடம்பெறும் அதில் சில , "தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் புலிகள்" , "தலைவரும் தளபதிகளும் எப்படி தப்பித்தனர்', "தலைவர் பாதுகாப்பாக உள்ளார்" ", "அதிரும் காடுகள் புதிய பயிற்சியில் புலிகள் " , "இறுதி வரை உறுதி குலையவில்லை", "பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி", மாவீரர் நாள் மறுபடியும் பிரபாகரன்" இப்படி நீள்கின்றன.

இந்த வார இதழ்கள் ஒரு வாரம் தலைவர் இறந்துவிட்டார் என்பதும் மறு வாரமே உயிரோடு இருக்கிறார் என்பதும் நாம் அதை காசு கொடுத்து வாங்கி படிப்பதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாவீரர் நாள் நெருங்கிய சமயம் இந்த இதழ்கள் அனைத்துமே பிரபாகரன் உரையாற்றுவாரா இல்லையா என்று உணர்ச்சிபூர்வ கட்டுரைகள் எழுதி காசு பார்த்தன.

இவர்கள் எழுதுவதை பார்த்து பிரபாகரன் வந்து மாவீரர் தின உரை நிகழ்த்த அவர் என்ன தமிழ் சினிமா ஹீரோவா!
ஒவ்வொரு வாரமும் ஆர்வமாக இந்த இதழ்களை வாங்கி பார்த்தால்,கடைசி இரண்டு அல்லது மூன்று பக்கங்களை ஒதுக்கி இருப்பார்கள். அதில் பிரபாகரனின் போர் சம்மந்தப்பட்ட படங்கள் அதன் கீழே 'புலி பிரமுகர்கள் சிலரை தொடர்பு கொண்ட போது' என்றோ 'புலம்பெயர் தமிழர்களிடம் விசாரித்த போது' என்றோ அல்லது 'எங்களுக்கு கிடைத்த நம்பகமான அல்லது உறுதியான தகவல்களின் படி' என்றோ ஆரம்பித்து ஒரு கதையை எழுதி முடிப்பார்கள்.

இனியாவது இத்தகைய இதழ்களை புறக்கணிப்போம்.

"தலைவன் இருப்பதை காலம் உறுதி செய்யும்".

No comments:

Post a Comment